< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 02.01.2025
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 02.01.2025

தினத்தந்தி
|
2 Jan 2025 6:53 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் மார்கழி மாதம் 18-ம் தேதி வியாழக் கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 1.31 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

திதி : இன்று அதிகாலை 04-02 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 10-30 முதல் 11-30 வரை

ராகு காலம் : பிற்பகல் 1-30 முதல் 3-00 வரை

எமகண்டம் : காலை 6-00 முதல் 7-30 வரை

குளிகை: காலை 9-00 முதல் 10-30 வரை

கௌரி நல்ல நேரம் : காலை 12-30 முதல் 1-30 வரை

கௌரி நல்ல நேரம் : மாலை 6-30 முதல் 7-30 வரை

சூலம் : தெற்கு

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

ராசிபலன்:-

மேஷம்

கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். வீடு மனையால் லாபம் வரும். அயல்நாட்டு தொடர்பு ஆதாயம் தரும். ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். பெண்களுக்கு பொறுப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

ரிஷபம்

வேற்று மொழி சார்ந்தவர்கள் உதவுவர். பகைவர்கள் சரணடைவர்.

உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். கலைஞர்களுக்கு சம்பளம் கூடும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்

திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : : ஆரஞ்ச்

கடகம்

வழக்கறிஞர்கள் வழக்கில் வெல்வர். உடல் நலம் தேறும்.

குடும்பப் பெண்கள் நிம்மதியடைவர். அரசியலில் புகழ் கூடும்.

பிள்ளைகள் நன்கு படிப்பர். வியாபாரத்திலிருந்த தொய்வு நீங்கும்.

அலுவலகத்தில் மரியாதை கூடும். உத்யோகஸ்தர்களுக்கு முக்கியத்துவம் மிகும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

சிம்மம்

உயரதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். காரிய தடை விலகும்.

உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பெண்கள் வேலையை விரைவாக முடிப்பர். உடன் பிறந்தவர்கள் உதவுவர். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. விரும்பியவரை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

பொது சேவையில் திருப்தி கிடைக்கும். பணப் பிரச்சினை இருக்காது. மனைவிமேல் அன்பு கூடும். பிரபலங்கள் நண்பர்களாவர். வீடு பராமரிப்பு செலவு உண்டு. நினைத்தது நடக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

அரசியல் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் போட்டி விலகும்.

உடல் பலம் பெறும். எதிர்பார்த்தது தங்களுக்கு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு சம்பளம் ஏறும். ஆசிரியர் அரசு விருதை பெறுவர்.

செலவுகளை சமாளிப்பீர்கள். பண விசயத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

விருச்சிகம்

மாணவர்களுக்கு விளையாட்டுத்தனம் குறையும். காதலில் வெறுப்பு ஏற்படும். வழக்கு இழுபறியாகும். விலகியவர்கள் தவறை உணர்வர்.

வெளிநாடு பயணம் உறுதியாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பெண்கள் நகைகளில் முதலீடு செய்வர். வியாபாரத்தில் லாபம் மிகும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

சகோதர வழியில் நன்மை உண்டாகும். ஆன்மீகச் சிந்தனை மேலோங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். செல்வாக்கு அதிகரிக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களால் ஆறுதலைடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்

பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் விலகும்.

உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் விலகிப் போவர்.

உடல்நிலை சரியாகும். வெளியூர் சென்று வருவீர்கள். இளைஞர்களுக்கு உத்யோகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

பண விசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வீடு கட்ட லோன் கிடைக்கும்.

வெளி நபர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பெண்களுக்கு நல்ல செய்தி வரும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும்.

வெளியிடங்களில் மரியாதை கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

மாணவர்கள் தேர்வின் பயம் நீங்கும். தொலைந்த பொருட்கள் கைக்கு கிடைக்கும். பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேருவர்.

எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். காதலர்கள் கடமையை உணர்வது நல்லது. உயர் கல்விக்கான முயற்சிகள் பலிதமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்




மேலும் செய்திகள்