< Back
மாத ராசிபலன்
நவம்பர் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்
மாத ராசிபலன்

நவம்பர் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தினத்தந்தி
|
1 Nov 2024 4:17 PM IST

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான நவம்பர் மாத பலன்களை பார்ப்போம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே..

உடல் பலத்தை விட மனோ பலம் மிக்கவர் நீங்கள். எதிலும் நீங்கள் மன உறுதியுடன் இருந்து நினைத்ததை முடித்துக் காட்டுபவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்கள் தங்களின் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுக்குடன் செய்து முடித்தால் தங்களுக்கு நல்ல மரியாதையும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கவலை வேண்டாம். தங்களின் சிறு தொழிலை விரிவாக்க தங்களுக்கு முதலீட்டுக்கு வங்கி கடன்கள் எளிதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுங்கள்.

குடும்பத் தலைவிகள், நகைகளை அடகு வைத்து பெற்ற கடனை இந்த மாதத்தில் ஒரு பகுதியை அடைத்து விடுவீர்கள். ஒரு சில நகைகளை மீட்கவும் வாய்ப்பு உள்ளது.

கலைஞர்களுக்கு அடுத்த நிலை என்ற அளவிற்கு சம்பளம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கதாநாயகன், கதாநாயகி வாய்ப்பு அல்லது அதற்கு இணையான வாய்ப்பும் கிடைக்கும்.

மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் வெளியில் செல்லும்போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது வேகத்தை குறைப்பது நல்லது.

பரிகாரம்

வியாழக் கிழமை அன்று தஷிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.

மகரம்

மகர ராசி அன்பர்களே..

எண்ணம் போல் வாழ்வு என்ற வரிகளை மதிப்பவர் நீங்கள். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்கள், தங்களுடன் வேலை பார்க்கும் உங்கள் சக ஊழிர்களிடம் சட்டென்று சினத்தை காட்டாமல் சாந்தமாக அவர்களை அனுகுவது நல்லது.

வியாபாரிகள், இருக்கும் தொழிலை விட்டுவிட்டு தெரியாத தொழிலில் அனுபவமின்றி செயல்படாதீர்கள். தெரிந்த தொழிலை செய்யுங்கள். ஒரு நாள் முன்னேற்றம் அடையும்.

குடும்பத் தலைவிகளை பொருத்தவரை, வீட்டில் மாமியார்-மருமகள் உறவுகளில் பிரச்சினை ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீட்டில் இருந்து கொண்டு செய்யும் தொழில்களான டைலரிங், பொம்மை தொழில் போன்ற சுயதொழிலை ஆரம்பக்கலாம்.

கலைஞர்களுக்கு படப்பிடிப்பு தாமதப்பட்டாலும் தங்களுக்கு நல்ல முக்கியமான கதாபாத்திரம் அமையும். தங்களின் பெயர் சொல்லும் வகையில் அது அமையும். காத்திருப்பது தவறல்ல.

மாணவர்கள் ஆசிரியரை கேலி கிண்டல் செய்வதை தவிர்ப்பது நல்லது. மரியாதை கொடுப்பது நல்லது. அது தங்களின் எதிர்கால கேரக்டரை நிர்ணயிக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை காயத்ரி மந்திரத்தை படித்து சனிபகவானை வணங்குவது நல்லது.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே..

மற்றவர்களுக்கு நல்லதே நினை, நல்லதே செய், நல்லதே நடக்கும் என்ற கொள்கையை போதிப்பவர் நீங்கள். அதன்படி தாங்கள் வாழ்ந்து காட்டுபவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு உங்களுடன் வேலை பார்ப்பவர்களிடம் எந்த பாகுபாடுமின்றி இருப்பது தேவையற்ற பகையை ஒழிக்கும். ஏற்றத் தாழ்வினை பார்க்காமல் அவர்களுடன் சுமூகமாக பழகி வருவதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வியாபாரிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இந்த மாதம் இருக்கும். வியாபாரம் சூடுபிடித்து அதில் அதிக லாபத்தினை பெறுவீர்கள்.

குடும்பத் தலைவிகள், தங்கள் கணவரின் உடல் நலனுக்காக பல விசயங்களை விட்டுக் கொடுப்பீர்கள். மாமியாரை மதித்து கணவனின் அன்பை பெறுவீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும் கதவைத் தட்டும். படம் முடிந்து இன்னும் திரைக்கு வராமல் இருப்பதால் கவலைப்படும் கலைஞர்களுக்கு இந்த மாதம் திரையிடும் தேதி அறிவிக்கப்படும்.

மாணவர்கள் விளையாட்டுத் தனத்தை கைவிட்டுவிட்டு தாங்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். அது தங்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்

பச்சை அம்மனுக்கு புதன் கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை அணிவித்து தரிசனம் செய்வது நல்லது.

மீனம்

மீன ராசி அன்பர்களே..

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால் துன்பம் இல்லை என்ற வேதவாக்கினை கொண்டவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கவனக்குறைவின்றி அதனை செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கலாம்.

வியாபாரிகளுக்கு பண நடமாட்டம் சற்றே கவலை தருமே என்றாலும் புதிய கடன்களைப் பெறாமல் ஏற்கனவே உள்ள சேமிப்புகளின் மூலம் சமாளித்துக் கொள்வீர்கள். பணியாளர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.

குடும்பத் தலைவிகள், வீட்டிற்குத் தேவையான சமையலறைப் பொருட்களை வாங்கிவிடுவர். தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படும்.

கலைஞர்களில் ஒரு சிலருக்கு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் மாதமாக அமையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கவலையை விடுங்கள்.

மாணவர்கள் ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்க வெட்கப்பட வேண்டாம். அன்றன்றே சந்தேகத்தை தீர்த்துக் கொண்டால் தாங்கள் அதிக மதிப்பெண்களை பெற உதவும்.

பரிகாரம்

சனிக்கிழமை அன்று லஷ்மி நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றி வணங்குவது நல்லது.

கணித்தவர்:

திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389

மேலும் செய்திகள்