டிசம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
|மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான டிசம்பர் மாத பலன்களை பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே..
பெரியவர்கள் மேல் எப்போதும் மதிப்பு குறையாது உங்களுக்கு. அவர்களை கண்ணும் கருத்துமாக பேணுபவர் நீங்கள்தான்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். அவர்கள் தங்களுக்கு ஆதரவும், சலுகைகளும் கொடுப்பர். பெரிய பொறுப்புகளும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு முன்பிருந்ததை விட சற்று தொய்வு நிலையை காணலாம். இருப்பினும் சற்று கடின உழைப்புடன் இருந்தால் நஷ்டத்திலிருந்து தப்பிக்க இயலும். புது நபரை பணப்பெட்டி அருகே விட்டிருப்பதை தவிருங்கள்.
குடும்பத்தலைவிகள் வீட்டிற்கு வரும் தங்கள் கணவரது உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் அமைதிகாப்பது மிக சிறந்த ஒன்று.
கலைஞர்கள் புதிய புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வீர்கள். முன் பணமும் கைக்கு கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு நல்ல நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் மிகுதியாகி நன்கு படிப்பர். அதிக மதிப்பெண்கள் பெறுவர்.
பரிகாரம்
சிவ பெருமானுக்கு வில்வ இலையால் மாலை ஞாயிறு அன்று கொடுத்து கும்பிடவும்.
ரிஷபம்
ரிசப ராசி அன்பர்களே..
நண்பர்களை மிகவும் நேசித்து அவர்களுக்காக எதையும் செய்யக்கூடிய உங்களுக்கு உறவினர்களின் தொடர்பு பெரும்பாலும் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட காலமாக தள்ளிப்போன பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பணத் தடை நீங்கும்.
வியாபாரிகளுக்கு வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருந்து தங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வர்.
குடும்பத் தலைவிகள் தாங்கள் பிள்ளைகளின் திருமண விசயமாக கோவில் பிரார்த்தனைகள் மற்றும் பரிகாரங்கள் செய்து முடிப்பர். பணவரவில் பிரச்சினை இல்லை.
கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கோப்பைகளை வெல்வர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலும் பங்கேற்பர்.
அரசு தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் தற்போதிலிருந்தே சிறப்பு பயிற்சி மேற்கொண்டு நன்கு படிப்பர். நல்ல மதிப்பெண்களை பெறுவர்.
பரிகாரம்
சாந்த நாயகி அம்மனுக்கு மல்லிகை பூச்சரத்தை வெள்ளிக்கிழமை அன்று கொடுத்து கும்பிடவும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே..
நீங்கள் பெரும்பாலும் மற்றவர்களை தன்வசப்படுத்திக் கொள்வதில் வல்லவர்களாக இருப்பீர்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரிக்கும். தங்கள் சக ஊழியர்களின் உதவியால் பங்கிட்டு முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
வியாபாரிகள், சில்லரை மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கும் எதிர்பார்ப்புக்கு மேல் வருவாய் அதிகரிக்கும். அதில் ஒரு பகுதியை எடுத்து வீடுகட்ட ஆரம்பிப்பீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு தங்களுடைய சேமிப்பு தொகை அதிகரிக்கும். பணம் தாராளமாக புழங்கும். வீட்டில் உறவினர்களின் வருகை உண்டு. அவர்களால் தங்களுக்கு நன்மையே விளையும்.
கலைஞர்களுக்கு தாங்கள் நடித்த படம் பல வருடங்களாகியும் வெளிவராமல் இருந்தால், அந்த படம் இந்தமாதம் வெளிவரும். அதில் தங்களின் நடிப்புத் திறன் வெளிப்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். ஆனால் உடல் நலனில் சற்று அக்கறையுடன் இருந்தால் நன்கு படிக்க உடல் ஒத்துழைக்கும். ஐஸ்க்ரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்
ஸ்ரீநிவாச பெருமாளுக்கு துளசி மாலையை அணிவித்து புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
கடகம்
கடக ராசி அன்பர்களே..
எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டாலும் சிறிதும் கலங்காமல் அவற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறும் வல்லமை உங்களிடம் இயல்பாகவே இருக்கிறது.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் யாரிடமும் பழகும் போது தங்கள் அந்தரங்க விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பொதுவான விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலுக்கு முதல் தேவைப்படுவதால் அரசு வங்கியில் கடன் கேட்பீர்கள். அரசுக் கடனும் கிடைத்துவிடும். அதனை வைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
குடும்பத் தலைவிகள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பங்களிப்பீர்கள். சேமித்த பணத்தில் பொன்நகை வாங்குவீர்கள்.
கலைஞர்கள் கலை நிகழ்ச்சிக்காக புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.
மாணவ மாணவிகளுக்கு படிப்பில் முழுக் கவனம் தேவை. தேவையற்ற விசயத்தில் கவனம் செலுத்தாமல் தங்களின் எதிர்காலத்தைப்பற்றி சிந்தித்து அதற்கேற்ப படிக்க துவங்குங்கள்.
பரிகாரம்
நாகாத்தம்மனுக்கு அரளி மலர் மாலையை அணிவித்து வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389