< Back
அட்வெர்ட்டோரில் செய்தி
கோயம்பேட்டில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் துப்புரவு பணியாளர் பலி
சென்னை
அட்வெர்ட்டோரில் செய்தி

கோயம்பேட்டில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் துப்புரவு பணியாளர் பலி

தினத்தந்தி
|
28 Jun 2023 2:18 PM IST

கோயம்பேட்டில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் துப்புரவு பணியாளர் பலியானார்.

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் மூவடி புஜ்ஜி (வயது 40). இவரது தோழி மேரி (38), இருவரும் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் நேற்று மதியம் வேலைக்கு செல்வதற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெற்குன்றம் அருகே சாலையை கடந்து சென்ற போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி சக்கரத்தில் இருவரும் சிக்கியதில் மூவடி புஜ்ஜி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இதில், பலத்த காயமடைந்து மேரி வலியால் துடித்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காயம் அடைந்த மேரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான மூவடி புஜ்ஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்கு காரணமான கார் டிரைவரான ராஜ்குமார் (31), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்