< Back
அட்வெர்ட்டோரில் செய்தி
யுஜிசி-யின் வகை-1 நிகர்நிலை பல்கலைக்கழகம்..! சத்யபாமா கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த உயர் அந்தஸ்து

பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன்

அட்வெர்ட்டோரில் செய்தி

யுஜிசி-யின் வகை-1 நிகர்நிலை பல்கலைக்கழகம்..! சத்யபாமா கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த உயர் அந்தஸ்து

தினத்தந்தி
|
20 Nov 2023 8:52 AM GMT

சத்யபாமா கல்வி நிறுவனத்திற்கு, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் "A++" தரத்தை வழங்கியிருப்பது 2023 ஆம் ஆண்டின் சாதனைகளில் ஒன்று.

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் கூறியதாவது:-

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் , தொலைநோக்கு பார்வை கொண்ட நிறுவன வேந்தர் டாக்டர் ஜேப்பியார் அவர்களால், திறன்வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் அறம் சார்ந்த ஆற்றல் வாய்ந்த மானுட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வால் உருவாக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC), நமது கல்வி நிறுவனத்துக்கு "A++" தரத்தை வழங்கியிருப்பது 2023 ஆம் ஆண்டின் சாதனைகளில் ஒன்று.

பல்கலைக்கழக மானியக் குழு, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வகை–1 இல் யுஜிசி ஒழுங்குமுறைச் சட்டம் 2018 (தரப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்கும் பல்கலைக்கழக வகைப்படுத்துதல் ) உரிமையின்படி, தரம் உயர்த்தியுள்ள தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பின்னணியில், நமது உயர்கல்வி நிறுவனத்தின் அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்துவதோடு, நமது எதிர்கால முயற்சிகளுக்கான உங்களுடைய மேலான ஒத்துழைப்பையும் எல்லையற்ற மற்றும் பயனுள்ள பங்களிப்பையும் இந்த தேசத்துக்கு வழங்க உறுதியேற்போம்.

நமது நிறுவனத்தின் வெற்றிகரமான இந்த உயரிய பயணத்துக்கு, தளர்வின்றி ஊக்கத்துடன் துணை நின்று ஆதரவளித்து வரும் பெற்றோர்கள், ஆளெடுப்பு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்