< Back
அட்வெர்ட்டோரில் செய்தி
சிறுநீரக அறுவைசிகிச்சை துறையில் ரோபோட்டிக்ஸ்
அட்வெர்ட்டோரில் செய்தி

சிறுநீரக அறுவைசிகிச்சை துறையில் ரோபோட்டிக்ஸ்

தினத்தந்தி
|
11 Aug 2023 4:00 PM IST

மனித கைகளை கொண்டு அறுவை சிகிச்சை செய்ய கடினமாக இருக்கும் உறுப்புகளில் கூட எளிதாக ஆபரேஷன் செய்ய இயலும்

ம்மில் பலர் ரோபோடிக் அறுவை சிகிச்சை என்றால் எந்திரன் படத்தில் வரும் சிட்டி போன்று ஒரு ரோபோ அறுவை சிகிச்சை செய்யும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது அப்படி அல்ல என்று ரோபோடிக் சர்ஜரி பற்றி காவேரி மருத்துவமனை மருத்துவர் ஆர்த்தி அவர்கள் விவரித்தது பின்வருமாறு.

ரோபோடிக் அறுவை சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?

ரோபோ என்ற எந்திரத்தை பயன்படுத்தி அறுவை சிகிச்சை நிபுணர்களால் ஆபரேஷன் செய்யப்படுவதே ரோபோடிக் அறுவை சிகிச்சை. அதன் சிறப்பு என்னவென்றால்,

1. திசுக்களை பத்து மடங்கு பெரிதாக்கி 3D பார்வை கிட்டும்.

2. ரோபோட்டின் நுண்கருவிகள் மனித கைகளின் அசைவுகளை என்டோரிஸ்ட்(ENDOWRIST) டெக்னாலஜி மூலம் அப்படியே பிரதிபலிக்கும்.

3. சிறிய துளைகள் (8 MM) மூலம் அறுவை சிகிச்சை முடிவேறும்.

இதனால் நமக்கு கிட்டும் நன்மைகள் என்னவென்றால்.

1. ரத்த இழப்பு மிக குறைவு

2. நோயுற்ற உறுப்பை சுற்றி இருக்கும் மற்ற திசுக்களுக்கு பாதிப்பு நேரிடாமல் பாதுகாப்பது எளிது

3. மனித கைகளை கொண்டு அறுவை சிகிச்சை செய்ய கடினமாக இருக்கும் உறுப்புகளில் கூட எளிதாக ஆபரேஷன் செய்ய இயலும்

4. சிறிய துளைகளினால் வலி பெரிதும் குறைவு

5. விரைவாக மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இயல்பு வாழ்க்கைக்கு செல்ல முடியும்.

சிறுநீரக அறுவைசிகிச்சை துறையில் ரோபோட்டிக்ஸ்

ரோபோடிக் சர்ஜரியின் உதவி பெரிதும் பயன்படுவது சிறுநீரகப் பிரிவில் தான் ஏனென்றால் பிராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் தான் உலக அளவில் ஆண்களுக்கு மிகவும் பொதுவான புற்று நோயாக இருந்து வருகிறது ஆனால் ஓபன் சர்ஜரி அல்லது லேப்ராஸ்கோபிக் சர்ஜரி மூலமாக அதனை அகற்றுவது என்பது மிகக் கடினமான செயல். மேலும் அதனால் ஏற்படும் இரத்தப்போக்கு, பின்வரும் சிறுநீர் அடக்கமின்மை, ஆணுறுப்பில் விறைப்பின்மை போன்றவற்றை ரோபோடிக் சர்ஜரியின் மூலமாக பெரிதும் குறைக்க இயலும். இதனால் புற்றுநோயற்ற ஆரோக்கியமான இயல்பு வாழ்க்கைக்கு நோயாளி விரைவில் திரும்புவார்.

மேலும் சிறுநீரக (kidney) புற்று நோய்க்கு முன்பு போல் அதனை முழுவதுமாக (radical nephrectomy) அகற்றாமல் புற்றுநோய்யுள்ள பகுதியை மட்டும் அகற்றி (partial nephrectomy) ஆரோக்கியமான பகுதியை காப்பாற்ற இயலும். இதனால் பின்னாளில் டயாலிசிஸ் தேவையை தவிர்க்க முடியும்.

அதுமட்டுமல்ல மென்மையான இரத்த ஓட்டம் கொண்ட சிறுநீரகக் குழாய்களில் அடைப்பு நேரிடும் பொழுது, சிறிய கருவிகளை கொண்டு, நுணுக்கமாக அதனை சரி செய்வதனால் ஆபரேஷனில் தோல்வி என்பது மிக மிகக் குறைவு. ஓபன் மற்றும் லேப்ராஸ் கோபியில் தோல்வியுற்ற அறுவை சிகிச்சை கூட ரோபோடிக் சர்ஜரியின் மூலம் சரி செய்து தருவது சுலபமான செயலாகும்.

அடடே, ரோபோடிக் சர்ஜரி என்றால் மிகவும் செலவு அதிகமாகுமே என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்த பிராஸ்டேட் சர்ஜரி, Partial Nephrectomy, போன்ற ஆபரேஷன்களுக்கு, ஒப்புதல் தருகின்றார்கள். மேலும் லேப்ராஸ்கோபிக் சர்ஜரியை விட சிறிதளவு செலவு அதிகமானாலும் அதன் நன்மைகள் பெரிதளவு என்பதால் அதனை ஏற்பதே புத்திசாலித்தனமான செயல் என்று சொன்னால் அது மிகையாகாது .

Doctors ப்ரொபைல்

Dr. Aarthy.P

Associate Consultant Urology & Robotic Surgery

Kauvery Hospital Alwarpet Chennai

For Appointments Call : 044 4000 6000

மேலும் செய்திகள்