< Back
அட்வெர்ட்டோரில் செய்தி
அட்வெர்ட்டோரில் செய்தி

சுந்தர் சி-யின் இயக்கத்தில் அழகிய உணர்வுகளின் தொகுப்பாக, 'காபி வித் காதல்' 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது...!

தினத்தந்தி
|
3 Nov 2022 8:34 AM IST

காதல், பாசம், சின்ன சின்ன சண்டை, அதற்கான தீர்வுகள் என அழகிய உணர்வுகளின் தொகுப்பாக இந்த படம் தயாராகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி இயக்கியுள்ள புதிய படம், 'காபி வித் காதல்'. குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, கிங்க்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாதன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

4-ந் தேதி 'காபி வித் காதல்' படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுகுறித்து இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது:-

இந்த படம் முழுக்க முழுக்க ஊட்டியின் பின்னணியில் அழகுற படமாக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் கொண்டாடக்கூடிய வகையில் காதல், பாசம், சின்ன சின்ன சண்டை, அதற்கான தீர்வுகள் என அழகிய உணர்வுகளின் தொகுப்பாக இந்த படம் தயாராகியிருக்கிறது. பெற்றோர்-பிள்ளைகள் இடையே இருக்கும் உறவின் பரிமாணத்தை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்துக்குள் தன்னை பொறுத்திக்கொள்வது நிச்சயம். படம் தொடங்கியதில் இருந்தே ஒரு புன்னகையுடன் பார்க்கும்படியான ஒரு பீல் குட் படம் எடுக்கவேண்டும் என்ற எனது ஆசை, இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும், என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சுந்தர் சி.



மேலும் செய்திகள்