< Back
அட்வெர்ட்டோரில் செய்தி
ஒண்டர்லா கேளிக்கை பூங்காவில் கிறிஸ்மஸ் புதுவருட கொண்டாட்டங்கள்
அட்வெர்ட்டோரில் செய்தி

ஒண்டர்லா கேளிக்கை பூங்காவில் கிறிஸ்மஸ் புதுவருட கொண்டாட்டங்கள்

தினத்தந்தி
|
22 Dec 2023 1:18 PM IST

2023 கிறிஸ்மஸ் மற்றும் புது வருட கொண்டாட்டத்தையொட்டி டிசம்பர் 23, 2023 முதல் ஜனவரி 1, 2024 வரை, இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கை பூங்காவான ஒண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் கலைகட்ட தொடங்கியுள்ளது.

2023 கிறிஸ்மஸ் மற்றும் புது வருட கொண்டாட்டத்தை ஒட்டி டிசம்பர் 23, 2023 முதல் ஜனவரி 1, 2024 வரை, இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கை பூங்காவான ஒண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் கலைகட்ட தொடங்கியுள்ளது. இந்த கொண்டாட்டங்களின் போது வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிக அற்புதமான அனுபவங்கள் என்றும் நினைவில் நிற்கும் வகையில் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்மஸ் பேண்ட் உடனான ஊர்வலங்கள், கேளிக்கை விளையாட்டுகள், நேரடி நிகழ்வுகள், உணவு உற்சவங்கள் மற்றும் துடிப்பான 61 ரைடுகள் பெங்களூருவிலும், 55 ரெய்டுகள் கொச்சியிலும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொண்டாட்டத்தின் போது குழந்தைகளும் பெரியவர்களும் சாண்டா தெருவில் நடந்து சென்று அனுபவிக்கவிருக்கும் நிகழ்வுகள் இந்த கொண்டாட்டத்தின் மிக முக்கிய, என்றும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் மாலை நேர சிறப்பு நிகழ்வுகளை அறிவித்துள்ளது ஒண்டர்லா. இதில் மாலை நான்கு மணி முதல் எட்டரை மணி வரை நடக்கவிருக்கும் நிகழ்வுகள் இந்த கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாகும். பெங்களூரு பூங்காவில் நடக்கவிருக்கும் புத்துணர்வு அளிக்கக்கூடிய 'பீட் குரு' என்ற லைவ் பேண்ட் மற்றும் டிஜே ஸ்நேஸ்டி, டிஜே ஷாம், டிஜே மிலன், டிஜே வினை, டிஜே கமரா, போன்றவர்களின் டிஜே நிகழ்ச்சிகளும் மற்றும் ஜும்பா நடனங்களும் குறிப்பிட்ட நாட்களில் நடக்க உள்ளது.

இவை மட்டுமின்றி 'மியூசிக்கல் பால் கர்ல்', எல்இடி ஜக்லிங் ஆக்ட், மேஜிக் ஷோ, இல்யூஷன் ஆக்ட் போன்றவை தினமும் மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை டிசம்பர் 23 முதல் ஜனவரி 1, 2024 வரை நடக்க உள்ளது.

இது மட்டுமின்றி கொச்சி பூங்காவில் திரை பின்னணி பாடகர்களான கீர்த்தனா சபரீஷ், ஜோபி ஜான், சுதீஷ் சலுக்காடி மற்றும் சோலார் ஃபோக் அவர்களின் நேரடி இசை நிகழ்ச்சி மற்றும் ராஜேஷ் என் ரமேசன் மற்றும் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் டிஜே சாவியோ, டிஜே ஷமில் மற்றும் டிஜே ஜுட் அவர்களின் டி ஜே நிகழ்வுகளும் தினசரி நடக்க உள்ளது. இவை தவிர எல்இடி டான்ஸ், மிரர் மேன், பபுல் டான்சர்ஸ் மற்றும் ஃபயர் டான்சர்ஸ் போன்றோரின் நடன நிகழ்ச்சிகளும் மாலை 6 முதல் 8:30 மணி வரை டிசம்பர் 23, 2023 முதல் ஜனவரி 1, 2024 வரை நடக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளை பற்றி ஒண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் கே. சிட்டிலப்பிள்ளி கூறுகையில், "இந்த பண்டிகை காலத்தின் எல்லா பரவச அனுபவங்களையும் ஒருசேர எங்கள் பூங்காவின் ஒவ்வொரு மூலையிலும் நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த மகிழ்ச்சிகரமான விடுமுறை காலத்தை வொண்டர்லாவில் நீங்கள் அனுபவித்து அதன் இனிமையான நினைவுகளை சுமந்து செல்லலாம். எல்லோரும் இணைந்து, எல்லாவற்றையும் பகிர்ந்து, மன மகிழ்ந்து இருக்கக்கூடிய எங்கள் பூங்காவின் பகல் மற்றும் இரவு நேர நிகழ்வுகள், அனைத்து வாடிக்கையாளர்களின் மனதிலும் என்றென்றும் மகிழ்ச்சியை இட்டுக் கொண்டிருக்கும் என்பது உறுதி" என்று கூறினார்.

இந்த பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளையும் வழங்குகிறது ஒண்டர்லா. 16 முதல் 24 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20% கட்டணச் சலுகையை வழங்குகிறது பூங்காவின் நுழைவு கட்டணத்தில் இந்த சலுகையை வழங்குகிறது. இது மட்டுமின்றி தங்கள் பிறந்த நாளின் ஐந்து நாட்களுக்கு முன்பும் பின்பும் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு நுழைவு கட்டணம் முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பிஎம்டிசி (BMTC) ஓல்வோ பேருந்தில் பயணம் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பேருந்து கட்டணச் சீட்டை காண்பித்தால், 15 % சலுகையை நுழைவு கட்டணத்தில் வழங்குகிறது ஒண்டர்லா.

வொண்டர்லா நுழைவு சீட்டை பெற கீழ்காணும் இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்: https://bookings.wonderla.com/.

மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்:

பெங்களூரு: +91 80372 30333, +91 80350 73966

கொச்சி: 7593853107

வொண்டர்லா ஹாலிடே லிமிடெட் நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் இந்தியாவில் கொச்சி பெங்களூரு மற்றும் ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் வொண்டர்லா ரிசார்ட் என்ற விருந்தினர் மாளிகையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் பல ரைடுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்யப்பட்டவை ஆகும். இதுவரை 4 கோடி வாடிக்கையாளர்கள் இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர் என்பதுடன் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள பொழுதுபோக்கு பூங்கா இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு www.wonderland.com என்ற இணையதளத்தை காணவும்.

மேலும் விவரங்களுக்கு அணுகவும்: தீப்தி- +91 9900021711, deepthi@wonderland.com

நிதி உசில் - +91 7975969870, nidhiu@avianwe.com

மேலும் செய்திகள்