இன்றைய ராசிபலன் - 24.09.2024
|12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் புரட்டாசி மாதம் 8-ந்தேதி செவ்வாய்க் கிழமை.
திதி: இன்று மாலை 6.49 வரை சப்தமி பின்பு அஷ்டமி திதி.
நட்சத்திரம்: இன்று அதிகாலை 4.40 வரை ரோகிணி பின்பு மிருகசீர்ஷம்
நல்லநேரம்: காலை : 7.45-8.45 மாலை : 4.45-5.45
ராகுகாலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை: 9.00-10.30
குளிகை: மதியம் : 12.00-1.30
சூலம்: வடக்கு
சூரிய உதயம்: 6.03
சந்திராஷ்டமம்: இன்று அதிகாலை 4.40 வரை சுவாதி பின்பு விசாகம்
இன்றைய பலன்கள்:
மேஷம்:
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு. விலகிச்சென்ற வர்கள் விரும்பி வந்திணைவர்.
ரிஷபம்:
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமணப் பேச்சுகள் முடிவாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
மிதுனம்:
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். கடிதம் கனிந்த தகவலை தரும். வளர்ச்சிக்கு குறுக் கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
கடகம்:
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்:
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
கன்னி:
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தருவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்:
விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். குடும்பப் பெரியவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். உயர்ந்த மனிதர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்:
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.
தனுசு:
உள்ளத்தில் நினைத்தவை உடனடியாக நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாக பேச்சுகளில் இருந்த தடைகள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
மகரம்:
அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும். உடல்நலம் சீராகும். பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல் மாறும்.
கும்பம்:
வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்துசேரலாம். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
மீனம்:
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகலாம்.