இன்றைய ராசிபலன் - 29.07.2024
|12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் ஆடி மாதம் 13-ம் தேதி திங்கட்கிழமை
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02.40 வரை பரணி பின்பு கிருத்திகை
திதி: இன்று இரவு 09.11 வரை நவமி பின்பு தசமி
யோகம்: சித்த, மரண யோகம்
நல்ல நேரம் காலை: 6.15 - 7.15
நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45
ராகு காலம் காலை: 07.30 - 09.00
எமகண்டம் காலை: 10.30 - 12.00
குளிகை மாலை: 1.30 - 3.00
கௌரி நல்ல நேரம் காலை: 09.15 - 10.15
கௌரி நல்ல நேரம் மாலை 7.30 - 8.30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டம்: பூரம், உத்திரம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
குலதெய்வ பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். மார்கெட்டிங்பிரிவினர் தொலைபேசி மற்றும் இ மெயில் வழியாகவும் அதிக ஆர்டர்களை பெற்று விடுவர். உறவினர்கள் பகை விலவி தாங்களாகவே விரும்பி வந்து உதவி செய்வர். வியாபாரத்தில் நட்டம் ஏற்படாது இயல்பு லாபம் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
பெண்கள் விளையாட்டுத் துறையில் பங்கெடுப்பர். அந்தப் போட்டியில் பரிசினையும வெல்வீர்கள். விற்பனையாளர்களுக்கு விற்பனை கூடி நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். தங்கள் பழைய நண்பரை எதிர்பாராதவிதமாக சந்திப்பீர்கள். பழைய நினைவலைகளை நினைவூட்டுவீர்கள். வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
மிதுனம்
சுய உதவிக் குழுக்களின் வழியாக தங்களுக்கு கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு இருந்த சில பிரச்சினைகளுககு தீர்வு ஏற்பட்டு மனம் சாந்தமாகும். பங்குச் சந்தை சாதகமாகும். நவீன தொழில் நுட்பத்தை தொழிலில் புகுத்துவீர்கள். ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கடகம்
பிள்ளைகளுக்கு தங்கள் மேல் மரியாதை கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
இன்று மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம். ஆனால், பூரம், உத்திரம் நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கன்னி
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இதன் காரணமாக நல்ல புரிதல் தங்களிடையே உருவாகும். சில நூதன பொருட்களை பழைய கால கடைகளில் வாங்கி வீட்டினை அழகுபடுத்துவீர்கள். பணவரவு தாமதப்படும். எனவே, தாங்கள் வீண் செலவினை குறைப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம்
தங்கள் கடைகளில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வந்து பழையபடியே தங்களிடம் பொருட்களை வாங்குவார்கள். மேலதிகாரிகள் பிரித்துக் கொடுப்பதால் உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைச் சுமை குறைவாகும். பிள்ளைகள் வேலைக்காக வெளிநாட்டிற்குச் செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைத்து வெளிநாடு செல்வர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
மாணவர்கள் விரும்பியவாறே தங்களுக்கு பிடித்த கலைகளில் பயிற்சி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் விரும்பிய துறையே தங்களுக்கு கிடைக்கும். தங்கள் உயர்ந்த எண்ணம் ஈடேறும் மனைவியால் உதவி உண்டு. எதிர்பாராத சில முக்கியமான நன்மைகள் உண்டாகும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
தனுசு
தங்கள் பிள்ளைக்கு நீண்ட நாட்களாக வரண் தேடியவர்களுக்கு தாங்கள் நினைத்த வரண் கிடைத்து விடும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அதிக மதிப்பெண்களை பெற மாணவர்கள் ஆசிரியரிடம் சந்தேகங்களை போக்கிக் கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
மேலதிகாரிகளின் பாராட்டினை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கும். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைக்கான முயற்சிகள் வெற்றி தரும். காவல்துறையில் உள்ளவர்களுக்கு ஏழை எளியவருக்கு உதவி சாதனைப்படைப்பர். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கும்பம்
உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக தாங்கள் விரும்பியச் சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் தங்களிடம் சூழ்ச்சி செய்தவர்கள் காணாமல் போவர். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் தங்களுக்கு வெற்றியைத் தரும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மீனம்
மூத்த சகோதர, சகோதரி வழி உறவு மேம்படும். வியாபாரம் செழிப்பாக இருக்கும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும் உத்யோகத்தில் விரும்பிய பதவி கிடைக்கும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உடலில் கவனம் தேவை
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்