< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 21.07.2024
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 21.07.2024

தினத்தந்தி
|
21 July 2024 7:28 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆனி மாதம் 5ம்-தேதி ஞாயிறு கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.49 வரை பூராடம் பின்பு உத்திராடம்.

திதி : இன்று மாலை 4.51 வரை பௌர்ணமி பின்பு பிரதமை

யோகம் : அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை : 03.15 - 4.15

ராகு காலம் மாலை : 04.30 - 6.00

எமகண்டம் மாலை : 12.00 - 1.30

குளிகை மாலை : 03.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை : 1.45 - 2.45

கௌரி நல்ல நேரம் மாலை : 1.30 - 2.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : ரோகிணி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வர். பிள்ளைகள் தாங்கள் நினைத்த துறையில் சேருவதற்கு முயற்சி செய்வர். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். தங்கள் கணவர் வழி உறவினர்கள் தங்களிடம் தவறை உணர்ந்து பேசுவர். உடல் நலம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

ரிஷபம்

இன்று ரோகினி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்து நட்பை புதுப்பீர்கள். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். ஆன்மீக யாத்திரைக்காக தயாராவீர்கள். ஷேர் மார்கெட்டின் மூலம் லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைபளு மிகும் மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். அரசியலில் ஆர்வம் மிகும். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும். பணப் புழக்கம் மிகும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

சிம்மம்

உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்கள் அலுவலகத்தில் யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு தொலைபேசி மூலமாக அதிகமான ஆர்டர்களை பெறுவர். தங்கள் துணைவர் தங்களின் பேச்சிற்கு மதிப்பு தருவர்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

கன்னி

பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் இயற்கை மருத்துவத்தால் சரியாகும். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

துலாம்

மாணவர்கள் விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவிப்பர். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்

விளையாட்டு வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்வார்கள். ஒரு சில மாணவர்கள் பகுதி நேர வேலைக்குச் செல்வார்கள். உடல் நலத்தில் பொலிவு கிட்டும். கணவன் மனைவி உறவுப் பலப்படும். அலைச்சல் அதிகரிக்கும். அதற்கேற்ப நல்ல வருவாயையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பெண்கள் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் தங்களுக்கு முக்கியமான திருப்பம் ஏற்படும். சகோதரர்களிடையே நிலப்பிரச்சனைக்கு சமரசத் தீர்வு காண்பர்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மகரம்

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

குடும்பத் தலைவிகளின் எண்ணம் நிறைவேறும், கடவுள் பக்தி அதிகரித்து ஆலயங்களுக்குச் செல்வீர்கள். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும் லாபத்தினை எட்டிவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

பெண்கள் கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும்.பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. சென்ற இடமெல்லாம் செல்வாக்கு கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மேலும் செய்திகள்