< Back
இன்றைய பலன்
Today Rasi Palan
இன்றைய பலன்

இன்றைய ராசிபலன் - 26.5.2024

தினத்தந்தி
|
26 May 2024 12:58 AM GMT

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் வைகாசி மாதம் 13-ம் தேதி ஞாயிறுக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 11.04 வரை மூலம் பின்பு பூராடம்.

திதி : இன்று மாலை 6.28 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம் : அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 7.30 - 8.30

நல்ல நேரம் மாலை : 3.30 - 4.30

ராகு காலம் மாலை : 04.30 - 6.00

எமகண்டம் பிற்பகல் : 12.00 - 1.30

குளிகை மாலை : 3.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை : 01.30 - 02.30

கௌரி நல்ல நேரம் மாலை : 01.30 - 02.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : பரணி, கிருத்திகை

இன்றைய ராசிபலன்:

மேஷம்

இன்று அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம். ஆனால், பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : கரும் பச்சை

ரிஷபம்

தம்பதிகளிடையே அன்பு கூடும். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பும். பகுதி நேர வேலை கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். திருமண முயற்சி பலிதமாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டநிறம் : கடல் நீலம்

மிதுனம்

திடீர் பயணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவர்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

கடகம்

குடும்பத் தலைவிகள் ஆடை ஆபரணச் சேர்க்கை செய்வர். ஒரு சிலர் புதிய நகை திட்டத்தில் பணத்தை சேகரிக்க துவங்குவர். வெளியூர் பயணத்தால் அசதி ஏற்படும். இந்த பயணங்களால் நன்மைகள் ஏற்படும். அலுவலகத்தில் நிம்மதி நிலவும்.

அதிர்ஷ்டநிறம் : வான் நீலம்

சிம்மம்

கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். தம்பதிகளிடம் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். தொழிலில் ஏற்றம் உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

கன்னி

ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்கள் நிரந்தர கம்பெனிகளுக்கு மட்டும் கடனுக்கு பொருட்களை கொடுக்கலாம். பிள்ளைகளுக்கு படிப்பதற்குண்டான வசதியினை செய்து கொடுப்பது நல்லது. பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

துலாம்

தம்பதிகளின் ஒற்றுமை ஓங்கும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக செல்லம் கொடுக்காமல் இயல்பு வாழ்க்கையினை புரிய வைக்கவும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும்.தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். உடல் நலம் பலப்படும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

தனுசு

சகோதரர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். சிறு தூர பயணம் ஏற்படும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

மகரம்

பணத்திற்கு குறைவு ஏற்படாது. செலவு அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கைகள் தேவை. பூர்வீகச் சொத்து வந்தடையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் . தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

கும்பம்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தாங்கள் நினைத்ததற்கும் மேலாகவே சம்பள உயர்வு கிட்டும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கதவை தட்டும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான நிலை எற்படும். உடலில் பொலிவும் உற்சாகமும் மிகும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். பண வரவு சீராக இருக்கும். நண்பரின் உதவி கிடைக்கும். வெளிநபருடன் வாதம் வேண்டாம். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

மேலும் செய்திகள்