< Back
டென்னிஸ்
உங்களுக்கு பிடித்த டென்னிஸ் வீரர் யார்?- ரசிகரின் கேள்விக்கு வீனஸ் வில்லியம்ஸ் பதில்

Image Courtesy: AFP 

டென்னிஸ்

"உங்களுக்கு பிடித்த டென்னிஸ் வீரர் யார்?"- ரசிகரின் கேள்விக்கு வீனஸ் வில்லியம்ஸ் பதில்

தினத்தந்தி
|
11 Nov 2022 11:41 PM IST

வீனஸ் வில்லியம்ஸிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், "உங்களுக்கு பிடித்த டென்னிஸ் வீரர் யார்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

வாஷிங்டன்,

டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுள் ஒருவராக அறியப்படுபவர் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா). ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களையும், 16 கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ள இவர் இதுவரை ஒலிம்பிக்கில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

அதில் மூன்று பதக்கங்கள் இரட்டையர் பிரிவில் தனது சகோதரி செரீனாவுடன் சேர்ந்து வென்றதாகும். வில்லியம்ஸ் சகோதரிகள் என அறியப்படும் செரீனா மற்றும் வீனஸ் பல ஆண்டுகளாக டென்னிஸ் உலகை தங்கள் தொடர் வெற்றிகளால் ஆட்சி செய்தவர்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் வீனஸ் வில்லியம்ஸிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், "உங்களுக்கு பிடித்த டென்னிஸ் வீரர் யார்? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தனது ஸ்டோரியில் பதில் அளித்த வீனஸ், "உங்களுக்கு தெரியாதா" என்ற பதிவுடன் சகோதரி செரீனா மற்றும் தான் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதில் அளித்து இருந்தார்.

மேலும் செய்திகள்