< Back
டென்னிஸ்
டென்னிஸ்
வூஹான் ஓபன் டென்னிஸ்: சபலென்கா, கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்
|12 Oct 2024 9:35 AM IST
இன்று நடைபெறும் அரையிறுதியில் கோகோ காப், சபலென்காவை எதிர்கொள்கிறார்.
பீஜிங,
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, போலந்து வீராங்கனை மேக்டலெனா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் மேக்டா லினெட் உடன் மோதினார்.
இதில் அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் கோகோ காப், சபலென்காவை எதிர்கொள்கிறார்.