< Back
டென்னிஸ்
உலக டென்னிஸ் தரவரிசை; இந்திய வீரர் சுமித் நாகல் 71-வது இடத்துக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்

டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசை; இந்திய வீரர் சுமித் நாகல் 71-வது இடத்துக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
18 Jun 2024 1:05 PM IST

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

புதுடெல்லி,

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் 77-வது இடத்தில் இருந்து 71-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். இத்தாலியில் கடந்த வாரம் நடந்த ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் போட்டியில் சுமித் நாகல் 2-வது இடம் பிடித்ததன் மூலம் இந்த ஏற்றத்தை கண்டு இருக்கிறார்.

தற்போது ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிறந்த தரநிலை வீரராக விளங்கும் 26 வயது சுமித் நாகல் அடுத்த மாதம் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்