< Back
டென்னிஸ்
டென்னிஸ்
உலக டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சரத் கமல் அதிர்ச்சி தோல்வி
|2 March 2023 1:01 AM IST
தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் கஜகஸ்தானின் கிரில் ஜெராஸ்சிமென்கோவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
கோவா,
உலக டேபிள் டென்னிஸ் 'ஸ்டார் கன்டென்டர்' சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்கள் தகுதி சுற்று நடந்தது. பிரதான சுற்று நேற்று தொடங்கியது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 8-11, 7-11, 8-11 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் கிரில் ஜெராஸ்சிமென்கோவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
இதையடுத்து ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது. அதில் ஜாயுன் அன்- செங்மின் சோ (தென்கொரியா) இணையுடன் மோதிய சரத்கமல்-ஜி. சத்யன் ஜோடி 6-11, 7-11, 11-7, 8-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.