< Back
டென்னிஸ்
உலக டேபிள் டென்னிஸ்: ஒரே நாளில் 3 வெற்றிகளை பெற்று அசத்திய மணிகா பத்ரா
டென்னிஸ்

உலக டேபிள் டென்னிஸ்: ஒரே நாளில் 3 வெற்றிகளை பெற்று அசத்திய மணிகா பத்ரா

தினத்தந்தி
|
2 March 2023 1:54 AM IST

இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா ஒரே நாளில் 3 வெற்றிகளை ருசித்து கவனத்தை ஈர்த்தார்.

கோவா,

உலக டேபிள் டென்னிஸ் 'ஸ்டார் கன்டென்டர்' சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்கள் தகுதி சுற்று நடந்தது. பிரதான சுற்று நேற்று தொடங்கியது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா ஒரே நாளில் 3 வெற்றிகளை ருசித்து கவனத்தை ஈர்த்தார்.

முன்னதாக பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் மணிகா பத்ரா 11-4, 11-8, 11-5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் டின்-டின்னை தோற்கடித்தார். பின்னர் பெண்கள் இரட்டையரில் அர்ச்சனாவுடனும், கலப்பு இரட்டையரில் ஜி.சத்யனுடனும் இணைந்து முதல் சுற்றில் வெற்றி கண்டு மணிகா பத்ரா கால்இறுதியை எட்டினார்.

அதே சமயம் இந்திய இளம் வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 2-11, 13-11, 8-11, 2-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஹனா கோடாவிடம் பணிந்தார்.

மேலும் செய்திகள்