உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அட்ரினா டயாசை (புயர்டோரிகோ) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கோவா,
உலக டேபிள் டென்னிஸ் 'ஸ்டார் கன்டென்டர்' சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 11-9, 11-8, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் அட்ரினா டயாசை (புயர்டோரிகோ) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. மணிகா அடுத்து கியான் டியான்யியை (சீனா) எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 147-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜீ 11-7, 11-8, 11-7 என்ற நேர் செட்டில் 18-ம் நிலை வீராங்கனை ஜியான் நான் யுவானுக்கு (பிரான்ஸ்) அதிர்ச்சி அளித்தார்.
இதைத் தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் மணிகா பத்ரா- சத்யன் கூட்டணி 10-12, 6-11, 6-11 என்ற நேர் செட்டில் ஜப்பானின் மிகா ஹரிமோட்டா- ஷூக்சுக் டோகாமி இணையிடம் 'சரண்' அடைந்தது.