பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இரட்டையர் பிரிவில் ரஷியா-பெல்ஜியம் ஜோடி சாம்பியன்
|இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் வெரோனிகா குடெர்மித்தோவா (ரஷியா)-எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஜோடி வெற்றி பெற்றது.
டெக்சாஸ்,
டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை வீழ்த்தி, பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு ரூ.12¾ கோடி பரிசாக வழங்கப்பட்டது.
அதே போல், இதன் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் வெரோனிகா குடெர்மித்தோவா (ரஷியா)-எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஜோடி 6-2, 4-6, 11-9 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-கேத்ரினா சினியகோவா இணையை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது.
1 மணி 42 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் குடெர்மித்தோவா -மெர்டென்ஸ் கூட்டணி டைபிரேக்கரில் 2-7 என்ற கணக்கில் பின்தங்கி இருந்து மீண்டு வந்து வெற்றியை ருசித்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு ரூ.2¾ கோடி பரிசாக கிடைத்தது.