< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

Image : AFP 

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
7 July 2024 1:06 PM IST

கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவா - போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் - கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவா ஆகியோர் மோதினர்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3,1-6,2-6 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.இதனால அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்