< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் செர்பியா வீரரை சந்திக்கும் சுமித் நாகல்
|29 Jun 2024 6:33 AM IST
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்- யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஒற்றையர் பிரிவில் தகுதி பெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் 53-ம் நிலை வீரர் செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் ரவுண்டில் மோதுகிறார்.
நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), எஸ்தோனியா வீரர் மார்க் லாஜலை எதிர்கொள்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), செக்குடியரசின் தகுதி நிலை வீரர் விட் கோபிரிவாவுடன் களம் காணுகிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் இகா ஸ்வியாடெக் (போலந்து) தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனினை சந்திக்கிறார்.