< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்

Image Courtesy: AFP 

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றுடன் வெளியேறிய சுமித் நாகல்

தினத்தந்தி
|
2 July 2024 3:15 PM IST

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் மியோமிர் கெக்மனோவிக்கும், 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் சுமித் நாகலும் கைப்பற்றினர். இதையடுத்து நடைபெற்ற 3 மற்றும் 4வது செட்களை மியோமிர் கெக்மனோவிக் முறையே 6-3, 6-4 என்ற என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் வெளியேறினார்.

மேலும் செய்திகள்