< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: வாவ்ரின்காவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!
|8 July 2023 8:24 AM IST
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்ரு இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் சுவிஸ் வீரர் வாவ்ரின்காவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் முதல் இரண்டு செட்களை 6-3, 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 3வது செட் ஆட்டத்தில் ஜோகோவிச்சுக்கு சற்று நெருக்கடி கொடுத்த வாவ்ரின்கா கடுமையாக போராடினார்.
ஆனால் இறுதியில் 3வது செட்டையும் ஜோகோவிச் கைப்பற்றினார். இறுதியில் 6-3, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வாவ்ரின்காவை வீழ்த்தி ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.