< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்:  சபலென்கா,ஒன்ஸ் ஜபேர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.!!
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: சபலென்கா,ஒன்ஸ் ஜபேர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.!!

தினத்தந்தி
|
11 July 2023 4:19 PM IST

சபலென்கா இந்த வெற்றியின் மூலம் 2-வது முறையாக விம்பிள்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 2-ம் நிலை வீராங்கனையான சபலென்கா 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட் ரோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.இந்த வெற்றியின் மூலம் 2-வது முறையாக விம்பிள்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.சபலென்கா காலிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட்போர்டு சாம்பியனான மேடிசன் கீட்ஸை எதிர் கொள்கிறார்.

இதில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6-வது நிலை துனிசிய வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர் 9-வது நிலை வீராங்கனையான கிவிட்டோவா உடன் மோதினார்.இந்த ஆட்டத்தில் ஜபேர் 6-0,6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.இவர் தனது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரைபகினா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

இருவரும் கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் மோதினர்.அதில் ரைபகினா வெற்றி பெற்று கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்