< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: சபலென்கா மற்றும் முர்ரே  2-வது சுற்றுக்கு தகுதி
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: சபலென்கா மற்றும் முர்ரே 2-வது சுற்றுக்கு தகுதி

தினத்தந்தி
|
5 July 2023 12:36 PM IST

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சபலென்கா மற்றும் முர்ரே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. முதல்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டிகளின் இடையே மழை குறுக்கீடும் நிலையும் தொடருகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 2-வது நிலையில் உள்ள சபலென்கா (பெலாரஸ்) முதல் சுற்று ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அங்கேரி வீராங்கனை பனா உத்வர்டியை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் அவர் 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மற்ற ஆட்டங்களில் ஜபேர் (துனிசியா), ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் முர்ரே (இங்கிலாந்து), 6-3, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் பெனிஸ்டனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார்.

மேலும் செய்திகள்