< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்; ரைபகினா,பெகுலா 3-வது சுற்றுக்கு தகுதி
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்; ரைபகினா,பெகுலா 3-வது சுற்றுக்கு தகுதி

தினத்தந்தி
|
7 July 2023 1:07 PM IST

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 3-ம் நிலை வீராங்கனை மற்றும் நடப்பு சாம்பியனுமான எலெனா ரைபகினா (கஜகஸ்தான்)-அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்) மோதினர். இதில் நடப்பு சாம்பியனான ரைபகினா 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாலை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் பென்சிக் (சுவிட்சர்லாந்து), வெக்கிச் (குரோஷியா), லினெட் (போலந்து) பொடா போலா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டத்தில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார். அதில் டிமிட்ரோவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்