< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ரைபகினா
|11 July 2024 7:03 AM IST
ரைபகினா அரையிறுதியில் பார்போரா கிரெஜிகோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) விரட்டியடித்து 2-வது முறையாக அரையிறுதியை எட்டினார்.
இவர் அரையிறுதியில் பார்போரா கிரெஜிகோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.