< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரிபகினா காலிறுதிக்கு தகுதி..!

image courtesy: Wimbledon twitter

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரிபகினா காலிறுதிக்கு தகுதி..!

தினத்தந்தி
|
5 July 2022 2:07 AM IST

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் சிமோனா ஹாலெப், பவுலா படோசாவுடன் மோதினார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் ஹாலெப் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் படோசாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரிபகினா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக்குடன் மோதினார். இந்த போட்டியில் மார்டிக்கை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று ரிபகினா காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்