< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை
|2 July 2024 8:55 AM IST
‘கிராண்ட்ஸ்லாம்’போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்'போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் மற்றும்
வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க நாளான நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 1-6, 6-4 என்ற ந் செட் கணக்கில் பிரான்சின் டியானே பேரியை வெளியேற்றி 2-வது சுற்றை எட்டினார்.
இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் எம்மா நவரோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.