< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
|14 July 2023 9:51 PM IST
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) - ஜானிக் சின்னருடன் (இத்தாலி) மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6, (7-4) என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.