< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் களம் இறங்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்... என்ன நடந்தது..?
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் களம் இறங்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்... என்ன நடந்தது..?

தினத்தந்தி
|
11 July 2024 3:52 AM GMT

ஜோகோவிச் அரையிறுதியில் லோரென்சோ முசெட்டி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் 7 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எதிர்கொள்ள இருந்தார். இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே மினார் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் ஜோகோவிச் களம் இறங்காமலேயே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் அரையிறுதியில் லோரென்சோ முசெட்டி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்