< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|6 July 2024 3:58 PM IST
அல்காரஸ் 3-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சிஸ் டியாபோ உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
லண்டன்,
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 5-7, 6-2, 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியாபோவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.