< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி
|13 July 2023 10:41 PM IST
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் ரோகன் போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப், பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் வெஸ்லி-நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியிடம் வீழ்ந்து இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.