< Back
டென்னிஸ்
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் காலிறுதிக்கு முன்னேற்றம்
|8 July 2024 9:07 PM IST
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), ஆர்தர் பில்ஸ் (பிரெஞ்சு) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் முதல் 2 செட்டுகளை டி மினார் கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை பிலிஸ் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். ஆனால் 4-வது செட்டை அலெக்ஸ் டி மினார் எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் 6-2, 6-4, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.