
Image courtesy: Screengrab from Twitter @SonySportsNetwk
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதி போட்டியை நேரில் கண்டு ரசித்த தோனி- வைரல் வீடியோ

ரசிகர்களின் ஆரவாரத்திற்கு தோனி புன்னகையோடு கை அசைக்கும் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
இந்த போட்டியில் 6-3, 6-7 (7-9), 6-7 (0-7), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி வெற்றி பெற்ற கார்லஸ் அல்காரஸ் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் கண்டு ரசித்துள்ளார். அவர் மட்டுமின்றி இந்திய அணியின் மற்றொரு உலக கோப்பை நாயகனான கபில் தேவும் நேரில் போட்டியை காண மைதானத்திற்கு வந்து இருந்தார்.
தோனி போட்டியை கண்டுகளிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கு தோனி புன்னகையோடு கை அசைக்கும் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.