வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
|காலிறுதி சுற்றில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ராக் க்ரீக் பூங்காவின் வில்லியம் எச்.ஜி. பிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மைதானத்தில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஜூலை 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 6ஆம் தேதி முடிவடைகிறது. தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான ஜெசிகா பெகுலா உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாக்கு எதிராக விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை எலினா ஸ்விடோலினா கைப்பற்றி அசத்தினார். பின்னர் எழுச்சி பெற்ற பெகுலா அதிரடியாக விளையாடி கடைசி 2 செட்டுகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டியில் பெகுலா 4 - 6, 6 - 3 மற்றும் 6 - 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
அவர் அரையிறுதி சுற்றில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சக்காரி உடன் விளையாட உள்ளார்.