< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஸ்வெரேவ், ரூப்லெவ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
|27 Aug 2024 7:40 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், சகநாட்டவரான மாக்சிமிலியன் மார்டரர் உடன் மோதினார்.
இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் 6-2, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மாக்சிமிலியன் மார்டரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் மற்றொரு முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் தனது முதல் சுற்று ஆட்டத்தில் பிரேசிலின் தியாகோ செய்போத் வைல்ட் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அனுபவ வீரரான ரூப்லெவ் 6-3, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் தியாகோ செய்போத் வைல்டை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.