< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஸ்வெரேவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

Image: AFP 

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஸ்வெரேவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
31 Aug 2024 6:53 PM IST

மூன்றாம் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் - அர்ஜென்டினா வீரர் தாமஸ் எட்சவரி ஆகியோர் மோதினர்.

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் - அர்ஜென்டினா வீரர் தாமஸ் எட்சவரி ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ் 5-7, 7-5, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்