< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

கோப்புப்படம் 

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

தினத்தந்தி
|
3 Sept 2024 5:48 AM IST

ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்றில் யுகி பாம்ப்ரி - அல்பனோ ஒலிவெட்டி ஜோடி தோல்வியடைந்தது.

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்றில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி - பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, கிரானோலர்ஸ் (ஸ்பெயின்)- ஜிபல்லாஸ் (அர்ஜென்டினா) ஜோடியுடன் மோதியது.

இதில் யுகி பாம்ப்ரி - அல்பனோ ஒலிவெட்டி இணை, 2-6, 2-6 என்ற நேர் செட்டில் கிரானோலர்ஸ் - ஜிபல்லாஸ் இணையிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது.

மேலும் செய்திகள்