< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல் சுற்று ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி...!
|30 Aug 2023 8:05 AM IST
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், பெல்ஜிய வீராங்கனை கிரீட் மின்னெனை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரீட் மின்னென் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வெற்றி பெற்றார்.