< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் தோல்வி கண்ட சிட்சிபாஸ்
|28 Aug 2024 8:41 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
நியூயார்க்,
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க முன்னணி வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் தனாசி கொக்கினாகிஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சிட்சிபாஸ் 6-7 (5-7), 6-4, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் தனாசி கொக்கினாகிஸ்டம் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.