< Back
டென்னிஸ்
US Open Tennis; Tommy Paul advances to 4th round

Image Courtesy: AFP 

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; டாமி பவுல் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
1 Sept 2024 2:53 PM IST

அமெரிக்காவை சேர்ந்த டாமி பவுல், கனடாவின் கேப்ரியல் டயல்லோ உடன் மோதினார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அமெரிக்காவை சேர்ந்த டாமி பவுல், கனடாவின் கேப்ரியல் டயல்லோ உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-7 (5-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்த டாமி பவுல், ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 6-3, 6-1, 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 6-7 (5-7), 6-3, 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற டாமி பவுல் 4வது (ரவுண்ட் ஆப் 16) சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டத்தில் டாமி பவுல், இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்