< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக் எளிதில் வெற்றி, சக்காரி அதிர்ச்சி தோல்வி

இகா ஸ்வியாடெக் (image courtesy: Bad Homburg Open twitter via ANI)

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக் எளிதில் வெற்றி, சக்காரி அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
28 Aug 2023 9:08 PM GMT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் இகா ஸ்வியாடெக் எளிதில் வெற்றி பெற்றார்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ரெபக்கோ பீட்டர்சனை (சுவீடன்) 58 நிமிடங்களில் பந்தாடினார்.

ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர். அதே சமயம் 8-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 71-வது இடம் வகிக்கும் ரெபேகா மசரோவாவிடம் (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்சாண்டர் பப்ளிக்கை (கஜகஸ்தான்) வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார்.

மேலும் செய்திகள்