< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றுடன் வெளியேறிய சுமித் நாகல்

Image Courtesy: PTI (Sumit Nagal)

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றுடன் வெளியேறிய சுமித் நாகல்

தினத்தந்தி
|
27 Aug 2024 11:05 AM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட டாலன் கிரீக்ஸ்பூர் 6-1, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் சுமித் நாகல் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6-2, 6-2, 6-4 என்ற நேட்ர் செட் கணக்கில் மால்டோவனின் ராடு ஆல்பட்டை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்