< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்
|30 Aug 2022 12:36 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிசில் செரீனா வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்,
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற வீரான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் மான்டினீக்ரோ நாட்டு வீராங்கனை கோவினிச்சை எதிர்கொண்டார்.
இதில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது வரிசையில் உள்ள அன்ட் கோனடாவிட் (எஸ்டோனியா), 23-வது வரிசையில் உள்ள கிரஜ்கோவா (செக்குடியரசு) லைலா பெர்னாண்டஸ் (கனடா), 5-வது வரிசையில் இருக்கும். ஜபேஷா (துனிசியா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.