அமெரிக்க ஓபன் டென்னிஸ்; பெண்கள் பிரிவில் சபலென்கா, மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!!
|அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நியூயார்க,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. தொடர் இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்கிறது. இந்த தொடரில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி ஒன்றில் இந்தாண்டு விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய செக் நாட்டை சேர்ந்த மார்கட்டா வாண்ட்ரோசோவா அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார். இதில் கீஸ் விம்பிள்டன் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில் கீஸ் 6-1 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதில் நடந்த மற்றொரு காலிறுதி போட்டியில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரஸ் நாட்டை சேர்ந்த சபலென்கா சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார். இதில் சபலென்கா 6-1 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் அரையிறுதியில் மேடிசன் கீஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.