< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கோப்புப்படம் 

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
31 Aug 2024 4:48 AM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா) - மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, நெதர்லாந்தின் சான்டெர் அரென்ட்ஸ் - ராபின் ஹாஸ் ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி 6-3, 7-5 என்ற நேர்செட்டில் சான்டெர் அரென்ட்ஸ் - ராபின் ஹாஸ் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

மேலும் செய்திகள்