< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் பால படோசா காலிறுதிக்கு தகுதி
|3 Sept 2024 7:56 AM IST
படோசா காலிறுதியில் எம்மா நவரோ உடன் மோத உள்ளார்.
நியூயார்க்,
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பால படோசா (ஸ்பெயின்), யபான் வாங் (சீனா) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய படோசா 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.
இவர் காலிறுதியில் எம்மா நவரோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.