< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஒலிம்பிக் சாம்பியன் கின்வென் செங் 4-வது சுற்றுக்கு தகுதி
|1 Sept 2024 7:53 AM IST
கின்வென் செங் 4-வது சுற்றில் டோனா வெகிச் உடன் மோத உள்ளார்.
நியூயார்க்,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் கின்வென் செங் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் ஜூலே நிமீயரை (ஜெர்மனி) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இவர் 4-வது சுற்றில் டோனா வெகிச் உடன் மோத உள்ளார்.