< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்...!

Image Courtesy: @usopen

டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்...!

தினத்தந்தி
|
4 Sept 2023 8:00 AM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் போர்னா கோஜோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 7-5, 6- 4 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் போர்னா கோஜோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்